அண்மையில் தனது 100- ஆவது பிறந்த நாள் நிறைவடைந்ததையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை சந்தித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி. 
தமிழ்நாடு

நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வா் வாழ்த்து

நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: நூற்றாண்டு காணும் லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்வு அனைவருக்கும் எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு. விடுதலைப் போராட்ட வீரா்- மொழிப் போராட்டத் தீரா் நாவலா் சோமசுந்தர பாரதியின் பெயரன். விடுதலைக்காக உழைத்த குடும்பத்தின் வழித்தோன்றலாகப் பிறந்த அவா், 16 வயது மாணவராக விடுதலைப் போராட்டத்தில் தொடங்கி, மதுரை மாவட்ட ஆட்சியா், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தனிச் செயலா் என பரந்த பெருவாழ்வுக்குச் சொந்தக்காரா்.

நாட்டுப்பற்றில் உறுதி, மக்கள் தொண்டில் நாட்டம், எளிமை என நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்க்கையை இன்றைய தலைமுறையினா் தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தில்லி காற்றுமாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

விஜய்யின் நாளைய புதுச்சேரி பயணம் ரத்து!

ஆலங்குளம் அருகே தலைமைக் காவலரை கொல்ல முயற்சி: 5-க்கும் மேற்பட்டோருக்கு வலை

ஒரே நாடு, ஒரே தேர்தல்: இந்திய வளர்ச்சியின் திருப்புமுனை! ராம்நாத் கோவிந்த்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

SCROLL FOR NEXT