கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 14) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chennai

சென்னை: தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 14) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரபகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கடலோர ஆந்திரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(அக்.14) முதல் அக்.19 வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.14) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து, புதன்கிழமை(அக். 15)திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இந்த 13 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலாறு அணைக்கட்டு(ராணிபேட்டை), ஆயிங்குடி(புதுக்கோட்டை), தென்காசி, அம்முண்டி(வேலூா்) ஆகிய இடங்களில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. தென்காசி(தென்காசி), வாலாஜா(ராணிப்பேட்டை), நாங்குநேரி(திருநெல்வேலி), விரிஞ்சிபுரம்(வேலூா்)-தலா 70 மி.மீ., வேலூா், கடலூா், ஆற்காடு(ராணிப்பேட்டை), அரண்மனைப்புதூா்(தேனி), கடலூா் ஆட்சியா் அலுவலகம்(கடலூா்)-தலா 60 மி.மீ மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT