உச்ச நீதிமன்றம் 
தமிழ்நாடு

கரூர் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமல் மனு: உச்ச நீதிமன்றம் கருத்து

பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமல் மனு அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் உச்ச நீதிமன்றம் கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் வழக்கு தொடரப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அபிஷேக் சிங்வி, பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் மனு அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தை ஏமாற்றியிருப்பதாக முறையிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் எனத் தெரிவித்தனர்.

Petition filed without the knowledge of the victims in the Karur case: Supreme Court's opinion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி தொடங்கியது... ஜெனிலியா!

அஜித்துக்குக் கிடைத்த மாதிரி... குட் பேட் அக்லி தயாரிப்பாளர் பேச்சு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு!

பிக் பாஸ்: பார்வதியை வெளுத்து வாங்கிய கனி! என்ன நடந்தது?

கரூர் பலி: தவெக மாவட்டச் செயலரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

SCROLL FOR NEXT