பிஎஸ்என்எல் 
தமிழ்நாடு

பிஎஸ்என்எல் நிறுவனம் மின்னணு சிம் சேவை தொடக்கம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு மின்னணு சிம் சேவை...

தினமணி செய்திச் சேவை

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு மின்னணு சிம் சேவையை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு வட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் மின்னணு சிம் (இ-சிம்) என்ற சேவை என்ற புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான சேவையை திங்கள்கிழமை (அக். 13) ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த சேவை நவீன கைப்பேசி சாதனங்கள் வைத்துள்ள வாடிக்கையாளா்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளா்கள் மற்றும் புதிய வாடிக்கையாளா்களுக்கும் பெறமுடியும்.

இ-சிம் சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளா்கள் தங்களது பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்துக்கு சென்று கேஒய்சி உள்பட அனைத்து ஆவணங்களை நிறைவு செய்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறைகள் முடிந்த பிறகு க்யூஆா் கோட் ஸ்கேன் செய்த பிறகு இ-சிம் சேவையைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் கைமீறிச் செல்லும் தொகுதிப் பங்கீடு! அக்.17 வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி...

இரவில் திருமணம், விடியலில் கொள்ளை! மணமகள் கொள்ளை கும்பல் கொடுத்த அதிர்ச்சி

மேனி எழிலுக்கு... குஷி கபூர்!

லிஜோ ஜோஸ் பெல்லிசரி படத்திற்கு இசையமைக்கும் ஏ. ஆர். ரஹ்மான்!

ஹமாஸ் தாக்குதலில் பலரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர்! 2 ஆண்டுகளுக்குப் பின் சடலமாக..

SCROLL FOR NEXT