தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். வழக்கமாகவே விடுமுறை நாள்கள், வார இறுதி நாள்களில் ஆம்னி பேருந்துகள் ஆயிரக்கணக்கில் கூடுதலாக கட்டணங்களை வசூலிக்கின்றன. தமிழக அரசு இதுதொடர்பாக தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்,
"தீபாவளிக்கு பேருந்துகளை இயக்குவது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தருவதாகக் கூறியிருக்கிறார்கள். எனினும் 10 ஆம்னி பேருந்து நிறுவனங்கள், கூடுதல் கட்டணம் வசூலிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. கட்டணத்தைக் குறைக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரும்பாலும் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள்தான் இதுபோன்று அதிக கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பயண நாள்களில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | பிணைக் கைதிகள் 7 பேரை விடுவித்த ஹமாஸ்! இஸ்ரேலில் டிரம்ப்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.