கலந்தாய்வு 
தமிழ்நாடு

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: அக். 18-இல் மூன்றாம் சுற்று நிறைவு

மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு முடிவுகள் வருகிற 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கலந்தாய்வுக் குழு (எம்சிசி) அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு முடிவுகள் வருகிற 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கலந்தாய்வுக் குழு (எம்சிசி) அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மாநில இடங்களுக்கும் இணையவழி கலந்தாய்வு அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் புதிய மருத்துவ இடங்களும், கூடுதல் இடங்களும் சேர்க்கப்பட்டு வருவதால் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் இணையவழியே இடங்களைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் வருகிற 18-ஆம் தேதியுடன் நிறைவு பெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 27-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேருவோரின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடியில் சிக்கினார்! ரூ. 13 லட்சம் இழப்பு!!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தேசிய சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிப்பறை குறித்த தகவலுக்கு ரூ. 1,000 வெகுமதி!

அலைபாயும் ஒரு கிளி... ரகுல் ப்ரீத் சிங்!

வெண்மேகம் பெண்ணாக... ப்ரீத்தி அஸ்ரானி!

SCROLL FOR NEXT