வடகிழக்குப் பருவமழை 
தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை!

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின்போது நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அதிகமாக மழை இருக்கும். குறிப்பாக வட மாவட்டங்கள் அதிக மழையைப் பெறும். அந்தவகையில், இந்தாண்டுக்கான வடகிழக்குப் பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளதாவது,

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா - மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 19- ஆம் தேதியில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரளம் - கர்நாடக பகுதிகளுக்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

The India Meteorological Department has announced that the northeast monsoon is likely to begin in Tamil Nadu and Puducherry in the next 48 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரு கரு விழிகளால்... ஆதிரை செளந்தராஜன்!

ஒரு பொம்மையைப் போல... ஷ்ருஷ்டி டாங்கே!

நல்ல மனநிலையை மறைக்க முடிவதில்லை... நுஸ்ரத் பரூச்சா!

கேக்ஸ்... சாரா டெண்டுல்கர்!

மொனாகோவில்... பூஜிதா பொன்னாடா!

SCROLL FOR NEXT