போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான போனஸ், அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உத்திரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு, 2024-2025-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய், இன்று (அக். 15) 1,05,955 பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,912 பேருந்துகள், 10,125 க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள், உள்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை வழங்குவதன் மூலம் தினசரி 1.97 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
இதில் 60% பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பங்களிப்பு இன்றியமையததாகும். இதனால் தமிழ்நாட்டின் பேருந்து வலையமைப்பு ஒரு முக்கியமான சமூக பாதுகாப்பு வலையமைப்பாக விளங்குகிறது.
முதல்வரின் உத்தரவுப்படி, போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு, 2024-2025 ஆம் ஆண்டிற்காக வழங்கப்படும் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் இன்று (15.10.2025), வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரத்தக் கொதிப்பில்தான் கருப்புப் பட்டை அணிந்தோம்: இபிஎஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.