முதல்வர் ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

கச்சத்தீவு மீட்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கச்சத்தீவை மீட்டுத் தர இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு வருகைதந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்டுத் தர வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கச்சத்தீவு மீட்பு, இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல், மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை பிரதமர் மோடி எழுப்பக் கோரிக் கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியா வந்துள்ள ஹரிணி அமரசூரிய, இன்று காலையில் இந்தியா வந்தடைந்தார்.

அக்டோபர் 18 வரை இந்தியாவில் இருக்கும் ஹரிணி அமரசூரிய, பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இலங்கையின் கல்வித் துறை அமைச்சரகாவும் பதவி வகிக்கும் பிரதமர் அமரசூரிய, தில்லியில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஒரு கட்சி மட்டும் என்னை நலம் விசாரிக்கவில்லை; அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை! - ராமதாஸ்

CM Stalin write a letter to PM Modi to recover Kachchatheevu from Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிறப்பு சான்றிதழில் பெயா் சேர்க்க அவகாசம்!

மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ரா பவார் பதவியேற்பு

94 வயதில் புதிய திரைப்படத்தை இயக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்!

மார்ச் 15-ல் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: திமுக

உலகம் முழுவதும் உதவித் தொகையுடன் கோடைக்கால சிறப்பு படிப்புகள்!

SCROLL FOR NEXT