ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை விதித்து வனத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது.
சதுரகிரியில் 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர், அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தினசரி காலை 6 முதல் 10 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சதுரகிரி மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் மற்றும் கட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சதுரகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி அக்டோபர் 21ம் தேதி வரை சதுரகிரி மலையேற தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.