மக்கள் கூட்டம் - கோப்பிலிருந்து 
தமிழ்நாடு

நெருங்கும் தீபாவளி: மதுரையில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!

நெருங்கும் தீபாவளியை முன்னிட்டு மதுரையில் பொருள்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளி நெருங்குவதால், ஆடை, அணிகலன்கள் வாங்க மதுரை சந்தைப் பகுதிகளில் மக்கள் குவிந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு தள்ளுபடி அறிவித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.

மதுரையில் தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, கீழமாசி வீதின்னு மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆடை, அணிகலன்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் தள்ளுபடியில் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில இனி போகப்போக கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்ததால், இந்த தெருக்கள் களை கட்டி வருகிறது.

மதுரை மாவட்டம் அல்லாது சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், மதுரை வந்து பொருள்களை வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மக்கள் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களது உடைமைகளையும், நகைகளையும் வாங்கிய பொருள்களையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

SCROLL FOR NEXT