நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூரில் கோயிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. அதிகபட்சமாக காயல்பட்டினம், திருச்செந்தூரில் 150 மிமீ மழை பதிவாகியுள்ளது.
முன்னதாக, "தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று மிக அதிகளவில் மழை பெய்யும். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் இன்று 3 மணி நேரம் மழை நீடிக்கும்" என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியிருந்தார்.
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலையில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.