கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த முதல் மிக பலத்த மழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடியவிடிய கனமழை பெய்து வருவதால், நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.