ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம். 
தமிழ்நாடு

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டிற்கு சென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். அதேபோல, ஓ. பன்னீர்செல்வம் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்துடன் சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் அவரைச் சந்தித்தார்.

ரஜினிகாந்த்துடன் முன்னாள் எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத்.

மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த்தை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களை முன்னாள் எம்பி. ரவீந்திரநாத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி. ரவீந்திரநாத்.

அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “இன்று (16.10.2025) உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் அவர்களை, மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து, மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, ஆசி பெற்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

O. Panneerselvam's surprise meeting with actor Rajinikanth!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்பை லாரி மோதி பெண் உயிரிழப்பு

நவ.14-இல் நொய்டாவில் உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதிச் சுற்று

சென்னை - சேலம் விமான சேவை நேரம் அக்.26 முதல் மாற்றம்

தெற்கு தில்லி: செப்டம்பரில் குற்றச் சம்பவங்கள் 20% குறைவு

தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது யு மும்பா

SCROLL FOR NEXT