கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் பேசுகையில், கோவையில் திறக்கப்பட்ட பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதைச் சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
அதற்குப் பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, தென்னகத்தின் மான்செஸ்டா் என்று அழைக்கப்படும் கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பாலத்துக்கு அந்த ஊரைச் சோ்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயா் சூட்டப்பட்டது.
மேலும், உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த நிலையில், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
விபத்துகள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, பாலம் கட்டப்பட்ட பிறகு விமான நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் விபத்துகள் ஏற்படலாம். எனவே, அங்கு ரப்பா் வேகத் தடை, போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.