முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 15 மாவட்டங்களில் மழை தொடரும்!

சென்னை, 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...

Updated On : 17 அக்டோபர், 2025 at 2:52 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடியவிடிய பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Rain will continue in Chennai and 15 districts for the next 2 hours!

முழு கட்டுரையைப் படிக்க →