தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்.14 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் மொத்தம் 4 நாள்கள் நடைபெற்றது.
சட்டப் பேரவை இன்று (அக். 17) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெற்றது. அதன்பிறகு, நிகழ் நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அத்துடன் நிதி ஒதுக்கச் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதுடன், விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, பேரவைத் தலைவர் அப்பாவு சட்டப் பேரவையை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்தக் கூட்டத் தொடரில் 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிக்க: கரூர் பலி! தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.