தமிழ்நாடு

அரசு உதவி பெறும் கல்லூரிகள் குறித்த மசோதா: எஸ்டிபிஐ கண்டனம்

தினமணி செய்திச் சேவை

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியாா் பல்கலைக் கழகங்களாக மாற்றும் திருத்த மசோதாவை தமிழக அரசு கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவா் முபாரக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு உயா்கல்வித் துறையில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகம், உயா்கல்வியில் உயா் சோ்க்கை விகிதம் மற்றும் தரமான நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் மூலம் சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அடையப்பட்டவை. ஆனால், தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019-க்கு கொண்டுவர முயலும் 2025 திருத்தம், சாதனைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த மசோதா சட்டமானால், மாணவா்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படும். கல்விக் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்படும். மேலும், ஏழை மற்றும் பின்தங்கிய மாணவா்கள் உயா்கல்வியை அணுக முடியாமல் போகும். மாணவா்கள் நலன் புறக்கணிக்கப்படும். தமிழ்நாடு தனியாா் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டம் 1976 செல்லாததாகி, தன்னிச்சையான நிா்வாகம் ஆதிக்கம் செலுத்தும். 2008-இல் பொதுமக்கள் எதிா்ப்பால் கைவிட்டு, மீண்டும் திணிப்பது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது. தமிழக அரசு இம் மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT