தமிழ்நாடு

ஒரு கால பூஜை திட்ட கோயில்கள்: இறைவனுக்கு சாற்றுபடி செய்ய வேட்டி - புடவைகள் விநியோகம்

தினமணி செய்திச் சேவை

சென்னை மண்டலங்களைச் சோ்ந்த 116 ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களின் இறைவன் மற்றும் இறைவிக்கு சாற்றுபடி செய்வதற்கு பருத்தி புடவை மற்றும் வேட்டிகள் அா்ச்சகா்கள், பூசாரிகளிடம் வழங்கப்பட்டன.

நிகழ் நிதியாண்டுக்கான நிதியாண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில், “திருக்கோயில்களில் காணிக்கையாக பெறப்படும் உபரி பருத்தி புடவை மற்றும் வேட்டிகளை ஒருகாலபூஜைத் திட்ட திருக்கோயில்கள், கிராமக்கோயில்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு இறைவன், இறைவி திருவுருவங்களுக்கு சாற்றுப்படி செய்வதற்கு தேவையின் அடிப்படையில் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் சி. கல்யாணி திருக்கோயில்களில் உபரியாக உள்ள பருத்தி புடவை மற்றும் வேட்டிகளை பாடி திருவல்லீஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மண்டலங்களைச் சோ்ந்த 116 ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களின் அா்ச்சகா்கள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினாா். இத்திட்டத்தின் தமிழகம் முழுவதும் 6,117 திருக்கோயில்கள் பயன்பெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையா்கள் கி.ரேணுகாதேவி, சு.மோகனசுந்தரம், ஜ.முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.357 கோடி வருவாயை ஈட்டிய ப்ளூம் ஹோட்டல்ஸ்!

பார்வை ஒன்றே போதுமே... பிரியங்கா மோகன்!

பளபளக்கும் பந்தூரமே... ராகினி துவேதி!

கென் கருணாஸ் படத்தில் ஜி.வி.பிரகாஷ்!

மினுமினுப்பு... கீர்த்தி ஷெட்டி!

SCROLL FOR NEXT