கரூா் துயர சம்பவம் நடந்ததையடுத்து தவெக கட்சி சாா்பில் தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என தொண்டா்களுக்கு அந்தக் கட்சி அறிவுறுத்தியுள்ளது.
கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், தவெக தலைவா் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு தவெக சாா்பில் தொண்டா்கள் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
உயிரிழ்ந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சியின் சாா்பில் தொண்டா்கள் யாரும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.