ஏனாம் பகுதி.  
தமிழ்நாடு

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

ஏனாம் பகுதியில் ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஏனாம் பகுதியில் ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுச்சேரியின் பிராந்தியங்களுள் ஒன்றாக ஏனாம் இருக்கிறது. தெலங்கானாவில் கிழக்கு கடற்கரையில் இப்பகுதியில் பருவ மழையால் சீரா மீன்கள் அதிகமாக கிடைத்துள்ளது. சீரா மீன்கள் 'சீரா மீனு' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மீன்கள் அறுசுவை உடையது. உடலுக்கும் நன்மை சேர்க்கும். இந்த மீன்கள் ஆந்திரம், தெலங்கானா பகுதியில் மட்டுமே கிடைக்கின்றன.

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

தற்போது வடகிழக்குப் பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால், இந்த சீரா மீன்கள் ஆந்திரா, தெலங்கானா பகுதியான கோதாவரி ஆற்றுப் பகுதியில் அதிகமாக கிடைக்கிறது.

சீரா மீன்கள் அளவையில் லிட்டரில் விற்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சீரா மீன் மொத்தமாக ரூ. 4 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

ஆனால், அதன் விலை லிட்டருக்கு ரூ. 1000-க்கு விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சீரா மீன்கள் நல்ல விலையில் விற்பனை செய்யப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Fishermen are delighted with the rare species of Seer fish that was auctioned for Rs. 30 lakhs in the Yanam area.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டி, கயத்தாறில் கத்தி, வாளுடன் இருவா் கைது

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டதுக்கு கூடுதல் கால அவகாசம் இல்லை: உயா்நீதிமன்றம்

கருங்கல் அருகே சிறுமி உயிரிழப்பு!

மணப்பாறையில் வீடுபுகுந்து நகை, பணம் திருடியவா் கைது

கிடங்குகளில் நெல் மூட்டைகள் சேமிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT