மாதிரிப் படம் 
தமிழ்நாடு

அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அரபிக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இணையதளச் செய்திப் பிரிவு

அரபிக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைக்கொண்டுள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதா என்று அடுத்தடுத்த நாள்களில் ஏற்படும் மாற்றங்களில் மட்டுமே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இதனால், அக். 21-ஆம் தேதிக்குள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்த்திகையில் வெயில் தருவா... காவ்யா அறிவுமணி!

வரம் வழங்கும் வள்ளல்

அகல் நகல்... யோகலட்சுமி!

நோய்கள் தீர்க்கும் இறைவன்!

பறவையே... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT