கோப்புப் படம் 
தமிழ்நாடு

தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!

கடந்த 3 நாள்களில் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் சென்றோர் எண்ணிக்கை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் 7.94 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அக். 16 முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 15,429 பேருந்துகளில் 7,94,990 பேர் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தீபாவளியையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

வார இறுதி நாள் மற்றும் திங்கள் கிழமை தீபாவளி மற்றும் தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்திருந்தது.

கடந்த 4 நாள்களில் ரயில்கள், பேருந்துகள், கார்கள் மூலம் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே அக். 16 முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 15,429 அரசுப் பேருந்துகளில் மட்டும் 7,94,990 பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | பட்டாசு வெடிப்போர் கவனம்... அடுத்த 3 மணிநேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

diwali festival 7.94 lakh people travel in government buses

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் முடிகிறது ஹார்ட் பீட் - 2 தொடர்!

இதற்காக அப்பா என்னை அடித்தார்: துருவ்

ஹேப்பி தீபாவளி... ஆஷ்னா ஜவேரி!

ஹேப்பி தீபாவளி... விஷ்ணுபிரியா!

ஹேப்பி தீபாவளி... பார்வதி திருவோத்து!

SCROLL FOR NEXT