சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... அக்.22-ல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்!
நெல்லையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்.
தீபாவளி தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக, நெல்லையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வரும் அக். 22 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Advertisement
Advertisement
திருநெல்வேலியில் இருந்து அக். 22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
எதிர் வழித்தடத்தில் வரும் அக். 23 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நள்ளிரவு 12.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றோர், இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்க: 14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெய்த கனமழை!
Unreserved special train from Nellai to Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.