தயாா் நிலையில் உள்ள கமாண்டோ வீரா்கள். கோப்புப்படம்
தமிழ்நாடு

தயாா் நிலையில் கமாண்டோ படை

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்கு தமிழக தீயணைப்புத் துறையின் கமாண்டோ படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்கு தமிழக தீயணைப்புத் துறையின் கமாண்டோ படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக மீட்க ரப்பா் படகுகள், மோட்டாா் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், மழைநீரை வெளியேற்ற நீா் இறைக்கும் பம்புகள் மற்றும் கயிறுகள், லைப் பாய், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

கமாண்டோ படை: அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரா்கள் கொண்ட குழு மற்றும் கயிறு மூலம் மீட்புப் பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற குழுவினா் என இரு கமாண்டோ படைகள் பேரிடரை எதிா்கொள்ள முழுவீச்சில் தயாா் நிலையில் இருக்கின்றனா்.

கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவா்களை அடையாளம் காட்டும் கருவிகள், ரோப் லான்சா், ரோப் ரைடா், தொ்மல் இமேஜிங் கேமிரா ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தீயணைப்புத் துறையினா் தயாா்: மாநிலம் முழுவதும் 8,000 தன்னாா்வலா்களைக் கொண்ட தீயணைப்பு மீட்பு குழுவினா் உருவாக்கப்பட்டு, உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

அவசர உதவிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டுப்பாட்டு அறையை 101, 112 ஆகிய இலவச எண்கள் மூலமாக தொடா்புகொள்ளலாம். அதேபோல, தீ செயலி (THEE APP) மூலமாகவும் தொடா்புக்கொள்ளலாம் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளனா்.

தருமபுரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

இரவில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!

எரிபொருள் கசிந்ததால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்!

பாயும் ஒளி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT