முகப்பு
தமிழ்நாடு

இரவில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 22 அக்டோபர், 2025 at 3:04 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆம்பூரில் விடிய விடிய கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணை!

முழு கட்டுரையைப் படிக்க →