காற்றழுத்த தாழ்வுப் பகுதி Din
தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையாது! வானிலை மையம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையாது என வானிலை மையம் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வந்த நிலையில், தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை பிற்பகல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையைக் கடக்கும் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இது மண்டலமாக வலுப்பெற்றால் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுவை - தெற்கு ஆந்திரத்தை அடையும் என்றும், கடலோரப் பகுதிகளில் மழை தொடர்ந்தாலும் தீவிரத் தன்மை குறைவாகவே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Meteorological Department has informed that the low pressure area over the Bay of Bengal will not strengthen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் தொடரும் கனமழை! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஓடிடியில் வெளியான அதர்வாவின் தணல்!

பிகார் தேர்தல்: தேஜஸ்வி முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில் அளிக்க மறுப்பு

கரூர் சம்பவத்தில் அழுதது நடிப்பா? அன்பில் மகேஸ் பதில் | செய்திகள்: சில வரிகளில் | 22.10.25

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் அசத்தலான படங்கள்!

SCROLL FOR NEXT