தமிழ்நாடு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வட உள்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை பிற்பகல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

வட தமிழகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது.

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, வடக்கு உள் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு உள் கர்நாடக பகுதிக்கு மேலே நிலைகொண்டது.

தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு உள் கர்நாடத்தில் மேலும் வலுவிழக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The deep depression has weakened!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ண மலர்களில் அரும்பாவாள்... ரீம் ஷேக்!

"டிரம்ப்பிடமிருந்து தப்பிக்கும் மோடி!": காங்கிரஸ் | செய்திகள்: சில வரிகளில் | 23.10.25

எனக்குப் பிடித்த நிறம்... நுஸ்ரத் ஃபரியா!

BJPவுக்கு Mari Selvaraj சொன்ன பதில்! "சாதி படம் வருவது சரியில்லைதான்!" | Bison | Dhruv Vikaram

தீப ஒளியில்... ஈஷா சிங்!

SCROLL FOR NEXT