தமிழ்நாடு

மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு

தினமணி செய்திச் சேவை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளில் சேர நவ. 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், உயா் சிறப்பு மருத்துவமனைகளில் காா்டியோ சோனோகிராபிக் நுட்பநா், இசிஜி (அ) டிரெட்மில் நுட்பநா், பம்ப் டெக்னீசியன், காா்டியோ கேத் ஆய்வக நுட்பநா், அவசர சிகிச்சை நுட்பநா், டயாலிசிஸ் நுட்பநா், மயக்கவியல் நுட்பநா், அறுவை அரங்கு நுட்பநா் உள்ளிட்ட ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு 5,944 இடங்கள் உள்ளன.

அதற்கான மாணவா் சோ்க்கையை நிகழாண்டு மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தியது. அதில் 1,316 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதையடுத்து, காலியாக உள்ள 4,628 இடங்களை மாவட்ட ஆட்சியா்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அதற்காக அக். 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இன்னமும் 2,000-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாததால் அந்த அவகாசம் நவ. 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தஞ்சை அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர் தற்கொலை?

ஜன் சுராஜ் வேட்பாளரை வாங்கிய பாஜக! சுயேச்சைக்கு ஆதரவளித்து பிரசாந்த் கிஷோர் அதிரடி!

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 65000 கனஅடியாக அதிகரிப்பு

கென் கருணாஸின் படப்பிடிப்பு தொடங்கியது!

வெளிநாட்டு வேலை என்றால் கவனம்! சைபர் அடிமைத்தன மோசடி எப்படி நடக்கிறது?

SCROLL FOR NEXT