மொந்தா புயல் 
தமிழ்நாடு

அக்.28ல் தீவிரப் புயலாக வலுப்பெறும் மொந்தா புயல்! வானிலை மையம்

மொந்தா புயல் அக்.28ல் தீவிரப் புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அக். 27ஆம் தேதி புயலாக மாறி ஆந்திரத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது அக். 28ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து, மச்சிலிப்பட்டனம் - விசாப்பட்டினம் இடையே மொந்தா புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அக். 28ஆம் தேதி மொந்தா புயலானது தீவிரப் புயலாக வலுப்பெறும் என தெரிய வந்திருக்கிறது.

வங்கக் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நேற்று மாலையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னம் உருவாகும் என்பதை உறுதி செய்திருக்கிறது.

வங்கக் கடலில், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு- தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், பிறகு அக். 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் அக். 28ஆம் தேதி தீவிர புயலாக வலுவடையும் என்று கூறப்படுகிறது.

அக். 27ஆம் தேதி தென் மேற்கு - மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக மாறும் மொந்தா, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவடைந்து கரையைக் கடக்கவிருக்கிறது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கி வங்கக் கடலில் உருவாகும் முதல் புயலானது ஆந்திரத்தை நோக்கி நகரும் நிலையில், இதற்கு மொந்தா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மொந்த என்ற பெயர் தாய்லாந்து வழங்கியது.

புயல் காரணமாக வரும் 27, 28ஆம் தேகிளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூா்: நகைக் கடை உரிமையாளா் வீட்டில் ஜிஎஸ்டி துறையினா் விடிய, விடிய சோதனை

சபரிமலை தங்கக் கவச மோசடி: பெங்களூரு, பெல்லாரியில் சோதனை; தங்கக் கட்டிகள் பறிமுதல்!

சேதமடைந்த நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க கோரிக்கை

தாய்லாந்து யானைகளுக்காக தனிக் குழு அமைத்த இலங்கை

பசும்பொன்னில் தேவா் ஜெயந்தி: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறாா்

SCROLL FOR NEXT