முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெங்கு மழை பெய்யும்?

வானிலை நிலவரம் பற்றி...

தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெங்கு மழை பெய்யும்?

வானிலை நிலவரம் பற்றி...

Updated On : 25 அக்டோபர், 2025 at 8:11 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வருகிற 27-ஆம் தேதி புயலாகவும் பின்னர் தீவிர புயலாகவும் மாறி வருகிற அக். 28 ஆம் தேதி ஆந்திரத்தில் கரையைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு மோந்தா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இதனால் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

TN Rain update for next 3 hours

முழு கட்டுரையைப் படிக்க →