கோப்புப்படம்.  
தமிழ்நாடு

கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி: மூவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

ரயிலைக் கவிழ்க்க சதி செய்த மூவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.

தினமணி செய்திச் சேவை

கோவையில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த, 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடனும் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது ரயில்களைதான்.

இதைத் தொடர்ந்து கோவையில இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிய வந்தது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல் துறையினர், அங்கு ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டையை அகற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுலகிருஷ்ணன், வினோத் என்ற சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வேதவன் என்ற 6 பேர் என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து ரயிலை சேதப்படுத்த முயன்றது தெரிய வந்தது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆகாஷ், தினேஷ், வேதவன் ஆகிய மூன்று பேர் ரயில் வண்டியை சேதப்படுத்தி பயணிகளின் உடைமைகளை திருடும் நோக்கத்துடன் கீழே கிடந்த மரக்கட்டைகளை எடுத்து ரயில் தண்டவாளத்தில் வைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்தார்.

சிறையில் உள்ள அவர்களிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

The Goon Act was imposed on 3 people who placed a wooden block on the tracks to derail a train in Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

புதிய விதிகள்... துபை... சரண்யா ஷெட்டி!

நிறங்கள்... அனுஷ்கா சென்!

‘மோந்தா’ புயல் ஒடிஸாவைத் தாக்கலாம்: 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம், காப்பீடு: தேஜஸ்வியின் தேர்தல் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT