முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்யக் கோரிக்கை!

தமிழ்நாட்டில் விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது குறித்து..

Updated On : 28 அக்டோபர், 2025 at 4:14 PM
ஜெ.பி. நட்டா / மு.க. ஸ்டாலின் - கோப்புப் படங்கள்
பகிர்:

தமிழ்நாட்டில் விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2025 குறுவை (காரீஃப்) பருவத்திற்கு முறையே 4.41 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.75 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 0.95 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 4.58 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு 4.37 லட்சம் மெட்ரிக் டன் (99%) யூரியா, 1.59 லட்சம் மெட்ரிக் டன் (91%) டி.ஏ.பி., 0.70 லட்சம் மெட்ரிக் டன் (74%) எம்.ஓ.பி. மற்றும் 3.70 லட்சம் மெட்ரிக் டன் (81%) என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 முதல் தொடங்கியுள்ளதாலும், அனைத்து முக்கிய நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இருப்பதாலும், சம்பா பருவத்தில் அதிகபட்ச நெல் சாகுபடி பரப்பளவில் உற்பத்தி செய்திட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், நவம்பர் மாதத்தில் உரங்கள், குறிப்பாக யூரியாவின் தேவை அதிகரிக்கும். சம்பா நெல் பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் கரும்பு போன்ற பிற பயிர்களின் சாகுபடியும் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சம்பா (ரபி) பருவத்தில் பயிர் சாகுபடி பல்வேறு சாதகமானகாரணிகளால் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நேரடி உரங்களுக்கான தேவை குறிப்பாக, யூரியாவுக்கான தேவை வரும் நாட்களில் பெருமளவில் அதிகரிக்கும்.

மாநிலத்தால் முன்மொழியப்பட்ட 6.94 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.93 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.88 லட்சம் மெட்ரிக் டன்எம்.ஓ.பி. மற்றும் 5.15 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களின் தேவையை, சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் உரிய நேரத்தில் பரிசீலித்து, வரும் மாதங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க | மழை அளவு கணக்கெடுப்பு நேரத்தில் மாற்றமா?

summary

Demand to meet farmers' fertilizer needs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.