மழை EPS
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை எப்படி இருக்கும்?

வானிலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்று (அக்.28) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களிலும்

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Montha cyclone: Tamilnadu rain update for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது தமிழா்களுக்குப் பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: 2 சிறுவா்கள் கைது

வத்தலக்குண்டு அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சுவால்பேட்டையில் விரைவில் காரியமேடை அமைப்பு

SCROLL FOR NEXT