தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் கொள்முதல்: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டில் (2025-26) விலையில்லா மிதிவண்டிகள் வழங்க கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டில் (2025-26) விலையில்லா மிதிவண்டிகள் வழங்க கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மாணவிகளுக்கு தலா ரூ.4,250 மதிப்பிலும், மாணவர்களுக்கு தலா ரூ.4,375 மதிப்பிலும் மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்முதல் ஆணை பெற்ற நாளில் இருந்து 15 நாள்களுக்கு மிதிவண்டிகளை விநியோகிக்க தொடங்க வேண்டும். 90 நாள்களுக்குள் முழுவதுமாக விநியோகம் செய்யப்பட வேண்டும். 60 நாள்களுக்குள் உதிரிபாகங்கள் பொருத்தும் பணியை முடிக்கவேண்டும். 2025-2026-ஆம் ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் முதல்வரால் தொடங்கிவைத்த பின், அந்தந்த மாவட்டங்களில் மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மிதிவண்டிக்குமான 3 ஆண்டு உத்தரவாத அட்டை மற்றும் முக்கிய பாகங்களுக்கான 5 ஆண்டு உத்தரவாத அட்டை ஆகியவை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளுக்காக பிரதமர் மோடி மேடையில் நடனமும் ஆடுவார்: ராகுல் விமர்சனம்

ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு! - நயினார் நாகேந்திரன்

மீண்டும் முக்கோண காதல்... திருமாங்கல்யம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

வயர்லெஸ் பவர் பேங்க்! போட் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

ஓபிசி ஆணையத்துக்கு அங்கீகாரம் வழங்கியது ராகுல் அல்ல, பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT