நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை: வனத்துறை, கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு!
நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தரகண்டில் இருந்து குட்டி யானையைக் கொண்டு வருவதற்கு தடை கோரி வழக்கு..
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தரகண்டில் இருந்து குட்டி யானையைக் கொண்டு வர தடை கோரிய வழக்கில், தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தது. இந்நிலையில் கோயிலுக்கு உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து 5 வயது குட்டி யானையைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தடை விதிக்கக் கோரி, 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்த மனு தொடர்பாக தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
New Elephant for Nellaiappar temple: Madras HC adjourned the case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.