மோந்தா தீவிர புயலாக நேற்றிரவு கரையைக் கடந்த நிலையில், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு தளர்த்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக வலுப்பெற்ற மோந்தா புயல் ஆந்திரத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்தது.
ஆந்திர கடலோர மாவட்டங்களில் தீவிர மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
ஒடிஸாவின் தெற்கு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும், மரங்கள் விழுந்ததில் வீடுகள் சேதடைந்தன.
இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திரத்தில் கரையைக் கடந்த நிலையில், 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.