வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் வலுவிழந்து கரையைக் கடந்துள்ளது. மோந்தா புயலின் மத்தியப் பகுதியில் சிக்கிய மாவட்டங்களில் கனமழை பதிவாகியிருக்கிறது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவான முதல் புயல் மோந்தா, தீவிரப் புயலாக கரையைக் கடந்துவிட்டது. இதனால், தமிழகத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரு சில நாள்கள் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
நேற்று மோந்தா புயல் கரையைக் கடந்துவிட்டதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டார்.
நவம்பர் 5ஆம் தேதி வரையிலான மழை நிலவரத்தை தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை அவர் பதிவிட்டிருப்பதாவது, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 10 நாள்களுக்கு நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும்.
வால்பாறை, நீலகிரி, பந்தலூர், அவலாஞ்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும். இதைத் தவிர, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, புதுச்சேரி, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்யலாம். மழை அங்கொன்றும் இங்கொன்றுமாக பெய்யுமே தவிர பரவலாக இருக்காது.
சென்னைக்கு ஒரு சொட்டு மழை பெய்யாது, வறண்ட வானிலையே இருக்கும் என்றார்.
முந்தைய பதிவில் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது,
நல்ல வெளிச்சத்தில் துணிகளை உலர்த்தலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அடுத்த 2 வாரங்களுக்கு மழை விடுமுறை கிடையாது.
ஒரு சில இடங்களில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திரைப்பட படப்பிடிப்புகள் வழக்கம் போல வெளியில் நடத்தலாம்.
அரசியல் கட்சிகளும் பொது வெளியில் கூட்டங்களை நடத்தலாம்.
கவலையின்றி திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்திக் கொள்ளலாம்.
கட்டுமான வேலைகள் பெயிண்ட் அடிப்பதையும் செய்யலாம்.
வானிலை மையத்திடமிருந்து சிவப்பு எச்சரிக்கை கிடையாது.
சென்னைக்கு ஆபத்து போன்ற அச்சமூட்டும் விடியோக்கள் குறையும்.
மழையால் பாதிக்கப்பட்ட உணவு டெலிவரி செய்யும் முகவர்கள் நிம்மதி அடையலாம்.
மீனவர்கள் நிம்மதியாக கடலுக்குச் செல்லலாம்.
வானிலை நிபுணர்கள் நிம்மதியாக அவர்கள் வேலையைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நவம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் காற்றழுத்தம் உருவாகாது.
இதையும் படிக்க... தென்காசியில் மாணவிக்கு கட்டப்படும் வீடு! முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.