தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 31) முதல் நவ. 5 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை (அக். 31) முதல் நவ. 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், அதிகபட்சமாக வெப்பநிலை 95 டிகிரியையொட்டி இருக்கும்.
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.