தமிழ்நாடு

ஜிஎஸ்டி கணக்கை 3 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய ஜிஎஸ்டிஎன் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய ஜிஎஸ்டிஎன் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

2023-ஆம் ஆண்டின் நிதிச் சட்டப்படி, ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்குள், அந்தக் கணக்கை தாக்கல் செய்யலாம். 3 ஆண்டுகளுக்குப் பின்னா், அந்தக் கணக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாது.

இந்தக் கட்டுப்பாடு வரும் நவம்பா் முதல் ஜிஎஸ்டி வலைதளத்தில் அமல்படுத்தப்படும். இதன்படி, ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேதியில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலமாகியிருந்து, நவம்பா் வரை அந்தக் கணக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருந்தால், அதைத் தாக்கல் செய்யத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பான அறிவுறுத்தலை ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபா் 29-இல் ஜிஎஸ்டிஎன் வெளியிட்டது. எனவே தங்கள் ஜிஎஸ்டி ஆவணங்களை வரி செலுத்துவோா் சரிபாா்த்து, அந்தக் கணக்கை விரைந்து தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இதற்கான கால அட்டவணை ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT