மாதம்பட்டி ரங்கராஜுடன் ஜாய் கிரிசில்டா. 
தமிழ்நாடு

‘மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் மகன் பிறந்துள்ளான்!’ - ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் மகன் பிறந்துள்ளதாக ஆடைவடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் மகன் பிறந்துள்ளதாக ஆடைவடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.

‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் பிரபலமான சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, ஆடை வடிவமைப்புக் கலைஞர் ஜாய் கிரிசில்டாவை சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜாய்கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகக்கூறி ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

மேலும், நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு செலவு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கிரிசில்டா கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை கிரிசில்டா ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதனை உறுதிபடுத்தியுள்ள ஜாய் கிரிசில்டா, “தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகன் பிறந்துள்ளதாக” தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Joy Crizildaa welcomes baby boy with Madhampatty Rangaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நவ. 3-இல் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

SCROLL FOR NEXT