தமிழ்நாடு

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு

தினமணி செய்திச் சேவை

சென்னை: உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க தனியாா் ஹோட்டலுக்கு சென்னை நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அபிநயா முத்து. இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு ஸ்விக்கி உணவு விநியோக செயலி மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் மதிய உணவு வாங்கினாா். அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் இறந்த நிலையில் கிடந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இந்த உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சேவைக் குறைபாட்டுடன் உணவு விநியோகித்த உணவகத்திடம் ரூ.50 இழப்பீடு பெற்றுத் தரக் கோரி சென்னை வடக்கு நுகா்வோா் நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி.கோபிநாத் மற்றும் உறுப்பினா் வி.ராமமூா்த்தி ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது.

தரமற்ற உணவை விநியோகித்து உணவகம் சேவை குறைபாட்டுடன் செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு ரூ.10,000 இழப்பீடாகவும், வழக்குச் செலவாக ரூ.2,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

ஒடிஸாவில் அடுத்த 3 நாள்கள் கனமழை நீடிக்கும்..!

உலகக் கோப்பை: பிரதிகா ராவலுக்குப் பதிலாக மாற்று வீராங்கனை அறிவிப்பு!

‘மோந்தா’ புயல்: சென்னையில் இரவுமுதல் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும்!

விஜய்யின் புதிய அணுகுமுறை! திருமாவளவன் விமர்சனம்!

Hattrick 100 கோடி!” விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

SCROLL FOR NEXT