ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு மழைப் பொழிவின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 43,000 கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளதற்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்தானது செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 24,000 கன அடியாகவும், புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,500 கன அடியாக தொடர்ந்து குறைந்தது.

ஒகேனக்கல்லில் மூன்று நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் அனுமதி அளித்துள்ளார். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு நான்காவது நாள்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Permission to operate a ferry in the Cauvery River at Hogenakkal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

SCROLL FOR NEXT