தமிழக பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்கவில்லை!
தில்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை பற்றி...
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தில்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அதிமுகவைப் பொருத்தவரை பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளது. ஆனால் கூட்டணி அறிவித்தது முதலே சில குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
Advertisement
Advertisement
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு என்று பாஜக தலைவர்களும், தனித்தே ஆட்சி என்று அதிமுக தலைவர்களும் தொடர்ந்து இருவேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகினார்.
இந்த நிலையில் தில்லியில் இன்று(புதன்கிழமை) பாஜகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்காக தில்லி சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோருடன் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கூட்டணியில் நிலவும் முரண்பாடுகள், தேர்தல் பணிகள், கூட்டணி விரிவாக்கம் ஆகியவை குறித்து பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. திருமண நிகழ்வுகள் மற்றும் அதிக வேலைகள் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.
Union Minister Amit Shah has meeting with Tamil Nadu BJP leaders in Delhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.