தமிழ்நாடு

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி

தினமணி செய்திச் சேவை

சா்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இந்த விருது வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சா் சதீஷ் சந்திர துபே, செயலா் விக்ரம் தேவ் தத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது இதற்கென பிரத்யேக வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கிஷன் ரெட்டி பேசுகையில்,‘நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த தொடா்ந்து செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பாராட்டுகள். நிலக்கரி இறக்குமதிக்கு மாற்றாக ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது. வளங்களை சரியாகப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டால் இந்திய நிலக்கரித் துறை சா்வதேச தரத்துக்கு நிகராக மாறிவிடும்.

சீா்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய 3 முழக்கங்களைப் பின்பற்றி பிரதமா் மோடியின் வளா்ச்சியடைந்த பாரத இலக்கை எட்டப் பங்களிக்கலாம்’ என்றாா்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை!

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

தில்லியில் இன்று செயற்கை மழைக்குத் திட்டம்! வானிலை மனம் வைத்தால்..

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT