அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு கெடு விதித்துள்ளார். இல்லையென்றால், ஒரே மனப்பான்மை உடையவர்கள் ஒன்றிணைந்து செய்து காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது:
”எம்ஜிஆர் இயக்கத்தை துவங்கிய காலத்தில் இருந்து அதிமுகவுக்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர் செங்கோட்டையன். இயக்கத்தில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் ஒரு நிலையில் நின்று, இயக்கத்துக்காக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என செயல்படுகிறார்.
அவர் எடுக்கும் நடவடிக்கைகளை அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அவரது எண்ணம் நிறைவேற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக சக்திகள் பிரிந்திருந்தால் வெற்றி பெற முடியாது என்ற சூழல் உள்ளது. கட்சி பிரிந்ததில் இருந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறோம். 5 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது. அந்த நிலை மாற வேண்டுமென்றால் கட்சி ஒருங்கிணைய வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.