படம் | ஏஎன்ஐ
தமிழ்நாடு

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

பாஜக கூட்டணியிலிருந்து தினகரன் வெளியேற யார் காரணம்? -நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தினகரன் வெளியேற யார் காரணம்? என்பதற்கு பதிலளித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார்.

முன்னதாக, மதுரையில் இன்று(செப். 6) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கொண்டு சென்றார். ஓ. பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காதது குறித்து நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவமானது. நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை சரியாகக் கையாளத் தெரியவில்லை.

நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்ல முடியும்? கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு பாஜக காரணமல்ல, தொண்டர்களின் முடிவால் வெளியேறினோம். நிதானமாக எடுத்த முடிவுதான் இது” என்று கூறினார்.

இந்த நிலையில், இது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “ஒருமித்த கருத்துகளைப் பிரதிபலிப்போர் ஒருங்கிணைந்தால், திமுக ஆட்சியதிகாரத்துக்கு மீண்டும் வர முடியாது. எனினும், தினகரன் இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

இந்தச் சூழலில், அவர்களை அணுகி மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செய்லபடுவது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட நான் தயாராக இருக்கிறேன். திமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், அதேபோல, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீது பாசம் வைத்திருப்பவர்கள், கட்டாயம் ஒன்றிணைந்து அதன்மூலம் திமுகவை வெளியேற்ற வேண்டும்.

நான் தனிப்பட்ட முறையில், டிடிவி தினகரனுடனும் ஓ. பன்னீர்செல்வத்துடனும் நேரடியாகச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், அஇஅதிமுகவில் உள்ள ஒவ்வொருத்தரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

Nainar Nagendran says, Dhinakaran walked out of the alliance, and I cannot be held responsible for that

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரமல்ல, ஆதாரம்!

மூன்றாவது கண்!

வணிகம் சரி...சமூக நலன்...?

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

SCROLL FOR NEXT