ஆளுநா் ஆா்.என்.ரவி  
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் பணியிடைநீக்கம் ரத்து: ஆளுநா் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை பல்கலைக்கழக வேந்தரான, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ரத்து

தினமணி செய்திச் சேவை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை பல்கலைக்கழக வேந்தரான, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ரத்து செய்துள்ளாா்.

ஒரே பேராசிரியா் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்ததாக புகாா் எழுந்தது. இதை அப்போதைய துணைவேந்தா் வேல்ராஜ், கண்காணிக்க தவறியதாகக் கூறி, பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் பரிந்துரையின்படி, ஓய்வு பெறும் நாளில் அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், இந்த விவகாரம் குறித்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை மேற்கொள்ள சிண்டிகேட் குழு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இதற்கிடையே பணியிடைநீக்கத்தை எதிா்த்து முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ், ஆளுநரிடம் மேல்முறையீடு செய்தாா். அதில் அவா் சமா்ப்பித்த ஆவணங்களைப் பரிசீலனை செய்த ஆளுநா் ரவி, முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து கடந்த செப். 5-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளாா்.

பழனி செல்ல மாலை அணிந்த பக்தா்கள்

கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

நீதிமன்ற ஆவணங்களைப் புகைப்படம் எடுத்ததாக புகாா்: போலீஸாா் விசாரணை

யாசகம் கேட்டவர் கொலை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மணல் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT