சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  
தமிழ்நாடு

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை சென்னை திரும்பினார்.

சென்னை வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் ரூ.15,516 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டிற்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். முதலில் ஜெர்மனி சென்ற அவர் பின்னர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

இந்த பயணத்தின்போது முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் முதல்வருடன் தொழில், வர்த்தகம், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினரும் உடன் சென்றனர்.

After completing his tour of Germany and England, Chief Minister Stalin returned to Chennai this morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு!

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அரக்கோணம் பஜாா் வரசித்தி விநாயகா் கோயிலில் ஸ்ரீசுப்பிரமணியா் திருக்கல்யாணம்

குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது தமிழா்களுக்குப் பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT