கோப்புப்படம் ENS
தமிழ்நாடு

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது தொடர்பான மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் இரு நபர்களிடையே இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் இந்த வழக்கின் மீது டிஎஸ்பி சங்கர் கணேஷ், ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கில், டிஎஸ்பி மீது கடும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கு எதிராக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க, அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்ட நிலையில், மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சதீஷ் குமார் கூறியுள்ளார்.

அதன்படி காவல்துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் முழு விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் பொருள்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியா்களை முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். முருகனின் புகாரின் பேரில் போலீசாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா். பேக்கரி உரிமையாளா் சிவா அளித்த புகாரின் பேரில் முருகன் மீதும் வழக்கு பதிவு செய்தனா்.

இந்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளா் மற்றும் அவரது உறவினா்கள் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு செய்தும் கைது செய்யப்படாமல் இருந்தனா்.

இதுகுறித்து முருகன் தரப்பினா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளாத தவறியதாக திங்கள்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷூக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ப.உ. செம்மல், மாலை 5 மணிக்குள் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தாவிட்டால் டிஎஸ்பியை சிறையில் அடைப்பேன் என எச்சரித்தாா் .

இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீஸாா், அவர்களைத் தேடி வந்த நிலையில் நீதிபதி ப.உ. செம்மல் நீதிமன்றத்தில் காத்திருந்த டிஎஸ்பி சங்கா் கணேஷை காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து நீதிமன்ற ஊழியா்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டிஎஸ்பி சங்கா் கணேஷை சீருடையிலேயே காஞ்சிபுரம் கிளை சிறை சாலைக்கு சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனா். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Kanchipuram DSP arrest: Appeal petition to be heard in High Court today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

3 மாவட்டங்களில் நாளை(அக். 28) பள்ளிகளுக்கு விடுமுறை!

ரோசா பூப்போல... வர்ஷா!

ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT